
புதுச்சேரி,சுய்ப்ரேன் வீதியில் உள்ள அல்லயன்சு பிரான்சியே அரங்கில் வரும்
24.10.2009 மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமியில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் ஆவணப்படத்தை வெளியிடுகிறார்.எழுத்தாளர் இரவிக்குமார் அவர்கள் முதற்படியைப் பெற்றுக்கொள்கிறார்.
நிகழ்ச்சியில் காவல்துறை முதுநிலைக் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீகாந்த் அவர்களும்,நிழல் இதழாசிரியர் ப.திருநாவுக்கரசு அவர்களும் உரையாற்ற உள்ளனர்.அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கிறோம்.

பார்க்க மிகவும் விருப்பமாக இருக்கிறது. என்ன செய்ய தொலைவில் உள்ளோம்.
ReplyDeleteஇளைய அப்துல்லாஹ்
ஊடகத்துறையில் தனது வருமானத்துக்காகவும் தனது சுய லாபத்துக்காகவும் பயன்படுத்தி வருபவர் மத்தியில் சமூகநோக்கோடு தங்கள் தயாரித்துள்ள அகவிழி குறும்படத்திற்கு லட்சக்கணக்கன பார்வையற்ற நண்பர்கள் சார்பாக எனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நல்ல நிகழ்வோடு தங்களது சமூக பணியினை நிறுத்திவிடாமல் தொடர்ந்து மாற்றுத்திரனாளர்களை வெளிக்கொணர்வதற்கான சமூகப்பணியினை செய்திட வேண்டுகிறேன். மேலும் பார்க்க www.handicappedwelfare.blogspot.com.
ReplyDeleteஇப்படிக்கு தோழமையுடன் திருச்சி R.பாக்கியராஜ்.